Events

organised, supported or partnered with BKM

Obituary Announcement of Shri. Venky Narayanan

பாரதி கலை மன்ற நீண்ட நாள் உறுப்பினர், தமிழ் ஆர்வலர், திரு. வெங்கி நாராயணன் (வேங்கட வரத தேசிகன் நாராயணன்) அவர்கள் மே 15 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. வெங்கி நாராயணன் அவர்கள் ஒரு நல்ல கலை ஆர்வலர்.  Ayan Tech என்ற நிறுவனம் தொடங்கி, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு வழங்கி வழி காட்டியவர்.    ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் குழுவினருடன் பல நாடகங்களில் மிகச்சிறந்த நடிப்பை நமக்கு வழங்கியவர்.  நந்தா, மெளனம் பேசியதே திரைப்படங்களின் இணை தயாரிப்பாளராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.  அருமையான கவிஞர் மற்றும் இசை அமைப்பாளர்.  பாரதி கலை மன்றம் சார்பாகவும்,  உதவும் கரங்கள் சார்பாகவும், ஹூஸ்டனின் மற்ற சமூக அமைப்புகள் சார்பாகவும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்தவர்.

அனைவருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நண்பராகவும் இருந்த திரு. வெங்கி நாராயணன் அவர்களின் மறைவு பாரதி கலை மன்றத்திற்கும், ஹூஸ்டன் தமிழ் நண்பர்களுக்கும் பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Copyright © 2019 Bharathi kalai manram, All rights reserved.
You are receiving this email because you are either a member of Bharathi Kalai Manram, Houston, TX or provided your email address to be included in Bharathi Kalai Manram distribution list.

Our mailing address is:

Bharathi kalai manram

310 Sandy Bluff Street

houston, TX 77079

Add us to your address book

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.