Events

organised, supported or partnered with BKM

Unveiling Thiruvalluvar statue on June 28th 

Unveiling Thiruvalluvar Statue

வரும் 2018 ஜூன் 28ஆம் தேதி ,திருவள்ளுவர் சிலை/படம் நிறுவும் விழா டாக்டர் G. விஸ்வநாதன் – வேந்தர் (Chancellor ) வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப்  டெக்னாலஜி அவர்களின் தலைமையில் “கண்ணப்பன் ஆர்ட் மியூசியத்தில் ” 2341 N. Galveston Avenue, Suite 200 Pearland, TX 77581, காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்க இருக்கிறது. 

வணக்கம் !
திருவள்ளுவர் 
பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவர். தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார்,பொய்யில்புலவர், பெருநாவலர், முதலிய பெயர்களால் போற்றுகின்றது.

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

இவரை,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என பாரதியாரும்,

“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே”

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பொது நெறி காட்டியவர் திருவள்ளுவர். இவர் கி.மு 31இல் பிறந்தவர் என அறிஞரால் உறுதி செய்யப்பட்டுத் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. தமிழக அரசு, தைத் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

திருக்குறள் 

திரு + குறள் – திருக்குறள். மென்மையான கருத்துகளைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலின், திருக்குறள் எனப் பெயர் பெற்றது. இஃது ஈரடிகளில் இயற்றப்பட்டிருப்பினும் விரிவான பொருளைத் தருகின்றது. இந்நூல் நாடு, மொழி, இனம் மதம், காலம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது. உலகப் பொதுமறை என்று போற்றப்பெறுகிறது.திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது “அறம், பொருள், இன்பம்”  என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒன்பது இயல்களையும் நூற்று முப்பது மூன்று அதிகாரங்களையும் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் கொண்டு விளங்குகிறது. ஆங்கிலம், லத்தின், கிரேக்கம் முதலிய உலகமொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை , திருக்குறளின் பெருமைகளைப் போற்றி புகழ்கின்றது.

“வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள் 

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச் 
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் 
இல்லாத தில்லை  இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே.” என பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளின் மேன்மையைத் தன் பாடல்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
 

 

Copyright © 2018 Bharathi kalai manram, All rights reserved.
You are receiving this email because you are either a member of Bharathi Kalai Manram, Houston, TX or provided your email address to be included in Bharathi Kalai Manram distribution list.

Our mailing address is:

Bharathi kalai manram

310 Sandy Bluff Street

houston, TX 77079

Add us to your address book

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.